Jan 30, 2010

துளசிச் செடிய அரளிப்பூவு - சேவல்




G. V. Prakash, I believe is AR Rahman's nephew. He has set to music this song, sung by a relative newcomer - Deepa Mariam and Hariharan, my absolute favorite singer! The movie is Seval - Rooster.

Frankly, this is a song with so many little nuances that are specific to Taml Nadu and life that my attempts to translate is simply becoming impossible. For example, one line will translate as "for four days I have been ful of your thoughts and I should sweat as a result"! I know what means, but the explanations will be long and lengthy. In addition, the seemingly disconnected sentences also get lost in translation.

So, my advice is, just enjoy the song and if you know Tamil, interpret it the way you understand. Better yet, add it as a comment.

So, rather than literally translate this, I will refer you to the YouTube video where the same has been already done!

The poster does not allow for embedding, so here is the link: http://www.youtube.com/watch?v=HARz01rsXoo
துளசிச் செடிய அரளிப்பூவு தூரமா தான் பாக்கணும்
என்ன நீயும் ஏத்துகிட்டா என்னென்னவோ கேக்கணும்
பட்டப்பகல் வெட்ட வெயில் நம்மை இப்ப சேர்க்கணும்
நாலு நாளா ஒன் நெனைப்பு நானும் ரொம்ப வேர்க்கணும்
என் உசிரே நீ உதிராம நான் புடிப்பேன்
நெல்லுக்கதிரே நீ கருகாம நான் வாழவைப்பேன்
எம்மனசே ஒம்பின்னால சுத்துதடா
ஒன் நெனப்பே என்கண்ணால குத்துதடா குத்துதடா

வேப்பங்குச்சா இருந்த என்ன வெட்டிவேரா மாத்தினே
சேவலப்போல் திரிஞ்ச என்ன ஊர்கோழியா ஆக்கினே
கட்டுத்தறி காளைபோல காலம் பூரா சுத்துவேன்
வீட்டுத்தறி போல உந்தன் காலடியில் சிக்குனேன்
ஒத்தவார்த்த சொன்னவுடன் ஓரங்கட்டி போனியே
மொத்தமாதான் என் நெனப்ப மூடிவச்சு நின்னியே
சொடலைமட சாமிமேல சத்தியமா சொல்லுறேன்
ஒம்மனசு காயப்படக் கூடாதுன்னு தள்ளுனேன்
என் வயசு ஒன்னப் பாக்காம கொறைஞ்சுடுமே
என் உசிரு நீ இல்லன்னா மறைஞ்சிடுமே

பாரிஜாதப் பூவ நீயும் பார்வையால தாக்குனே
பம்பரமா சுத்தி என்ன தந்திரமா மாத்துனே
கத்தி கம்பு அறுவா எல்லாம் நீயும் தூக்கி வீசினே
ஒன் கள்ளத்தனம் அத்தனையும் காதலாத்தான் மாத்துனே
முக்குளத்து தோட்டத்துல நான் பரிச்சேன் முல்லைதான்
நீ மூணு வயல் தாண்டிப் புட்டா என் மனசு தொல்ல தான்
சாயர்புரம் சந்தையில வாங்கிவந்தேன் மோதிரம்
சாயங்கால நேரம் வந்த ஒன்னோட ஞாபகம்
என் உயிரே என்ன ஒரு நாளும் மறக்கலையே
இளம்பயிரே உன்ன ஒரு நாளும் வெறுக்கலையே

No comments: